D
கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலையில் போலியான அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கடை ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
போலியான அழகுசாதனப் பொருட்களை விற்பனை செய்ததாக கூறப்படும் அதன் உரிமையாளரை கைது செய்துள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடையில் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த சுமார் 3 லட்சம் ரூபாய் பெறுமதியான 27 வகையான அழகுசாதனப் பொருட்கள் மற்றும் க்ரீம்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிலியந்தலை ஜாலியகொட பிரதேசத்தில் உள்ள கடையில் தமது பிரதிநிதித்துவ முகவர் நிலையத்தின் அனுமதிப் பத்திரத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட அழகுசாதன பொருட்களின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட போலி அழகுசாதன பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அழகுக்கலை நிலையம் நடத்தும் நிறுவனத்தின் சட்டப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.
அதற்கமைய, நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவின் பேரில் பெண் அதிகாரி ஒருவர் வாடிக்கையாளரைப் போன்று மாறுவேடமிட்டு 1350 ரூபாவை செலுத்தி முகத்திற்கு பயன்படுத்தும் திரவம் ஒன்று பெற்றுக் கொள்ளப்பட்ட நிலையில் அது போலியானதென தெரியவந்துள்ளது.