Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

சூர்யாவின் வீட்டில் ஒரு முக்கியமான ரூல் உள்ளது… முதன்முறையாக ஓபனாக கூறிய ஜோதிகா

0 3


தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நட்சத்திர ஜோடிகளில் முக்கியமானவர்கள் சூர்யா மற்றும் ஜோதிகா.

சிவகுமாரின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நுழைந்து சூர்யா நடித்துவர, வாலி படத்தின் மூலம் தமிழ் பக்கம் வந்தவர் நடிகை ஜோதிகா.

சூர்யாவுடன் சில படங்கள் இணைந்து நடிக்க இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணமும் செய்துகொண்டார்கள்.

இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இப்போது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ள ஜோதிகா நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.

தமிழ் மட்டுமில்லாது ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் பிஸியாக நடிக்கிறார்.

இந்த நிலையில் நடிகை ஜோதிகா தனது குடும்பத்தில் இருக்கும் ஒரு ரூல்ஸ் குறித்து பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர், வீட்டில் பெண்கள் ஒரு செட், ஆண்கள் ஒரு செட்டாக இருப்போம்.

ஆனால் சூர்யா இரண்டு பேருக்கும் நடுவில் இருப்பார்.

கார்த்தி, சூர்யா படப்பிடிப்பில் பிஸியாக இருப்பார்கள், சிவக்குமார் அப்பா ஸ்பீச் கொடுப்பதில் பிஸியாக இருப்பார். எங்க வீட்டில் ஒரு ரூல் இருக்கிறது, மதிய உணவும், இரவு டின்னரும் எல்லோரும் சேர்ந்து சாப்பிட வேண்டும் என்பது தான் அந்த ரூல்.

இதனால் அந்த இரண்டு நேரமும் ஒட்டுமொத்த குடும்பமும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம் என கூறியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.