D
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் எந்தவொரு செயற் திட்டமும் எம்மிடமில்லை என ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
பியகம பிரதேசத்தில் இன்று(30) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அனைத்து மக்களதும் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு அரசியல் நோக்கமுடையவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தமது கடமையல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது கொள்கையில் நாட்டுக்கு குந்தகம் ஏற்படுத்தக் கூடிய எந்தவொரு சட்டமோ சரத்தோ கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்தி மக்களின் நலன்களை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.