D
இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனத் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி சட்டத்தரணி கௌசல்ய நவரத்னவுக்கு, சட்டத்தரணிகள் சம்மேளனம் ஏகமனதாக அழைப்பு விடுத்துள்ளது.
முன்னதாக, இலங்கை சட்டத்தரணிகள் நியமித்த விசேட குழு, சட்டத்தரணிகள் சம்மேளனம் மற்றும் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை ஆகியவற்றுக்கு இடையேயான பரிவர்த்தனைகள் குறித்த முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது
அதில் சட்டத்தரணிகள் சம்மேளனத் தலைவர் கௌசல்ய நவரத்ன, எதிர்பார்த்த வெளிப்படைத் தன்மையைப் பேணத் தவறியதாகவும், எனவே அவர் வழிநடத்தும் அமைப்பின் நம்பிக்கையை, இது மீறுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒப்பந்த ஏற்பாடுகள் மற்றும் வளவாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் நவரத்ன முதன்மையாக செயற்பட்டுள்ளார் என்று இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளனம் நியமித்த விசேட குழு கண்டறிந்துள்ளது.
அத்துடன் ஜப்பான் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ஏற்பட்ட நிதித் தாக்கங்கள் மற்றும் பொறுப்பான முறையில், அவை நடத்தப்படுவதை உறுதி செய்ய தவறியதற்காக நவரத்னவை குழுவின் அறிக்கை விமர்சித்துள்ளது
இந்தநிலையில், இலங்கை சட்டத்தரணிகள் சம்மேளன செயற்குழு விரைவில் கூடி, விசாரணைக்குழுவினது, அறிக்கையின் தாக்கங்கள் குறித்து ஆலோசிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.