D
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் அதிசொகுசு பஸ் விபத்துக்குள்ளாகி உள்ளது.
கம்பஹா பகுதியை அண்மித்த வேளையில் இன்று அதிகாலை 3.45 மணியளவில் விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிவேகமாக பயணித்த பஸ், வேகக் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியது. விபத்தின் போது எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
எனினும் பஸ்ஸிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.