D
ஜேர்மனியில் முதல் முறையாக இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் தீவிர வலதுசாரி கட்சி ஒன்று மாகாணத் தேர்தலில் வெற்றியை நெருங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புலம்பெயர் மக்களுக்கு ஜேர்மனியில் கடந்த 2013இல் உருவான AfD கட்சியே தற்போது மாகாணத் தேர்தல் கருத்துக்கணிப்புகளில் முன்னணியில் உள்ளது.
புலம்பெயர் மக்களுக்கு எதிரான, ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரங்களுக்கு எதிரான கொள்கைகள் கொண்ட கட்சியாக இந்த AfD காணப்படுகிறது.
இந்நிலையில் AfD கட்சியால் ஆட்சியை கைப்பற்றுவது சுலபமல்ல என்றே அரசியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
மேலும், பிரான்சில் தீவிர வலதுசாரி கட்சிகளுக்கு ஏற்பட்ட அதே நிலை AfD கட்சிக்கும் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே, சாக்ஸனி(Saxony) மாகாணத்திலும் AfD கட்சி சிறந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.
தேசிய அளவில் முதன்மையான எதிர்க்கட்சியாக உள்ள CDU கட்சி சாக்ஸனி மாகாணத்தில் 32 சதவிகித வாக்குகளை கைப்பற்றியுள்ள நிலையில் 31.5 சதவிகித வாக்குகளுடன் AfD கட்சி இரண்டாமிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சாக்ஸனி (Saxony) மாகாணத்தில் வாக்களிக்க தகுதியான மக்களின் எண்ணிக்கை 3.3 மில்லியன் என்றும் Thuringia மாகாணத்தில் 1.7 மில்லியன் பேர்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், புலம்பெயர் கொள்கைகள் கடுமையாக்கப்பட வேண்டும் மற்றும் உக்ரைனுக்கு ஆயுத ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துவரும் BSW கட்சி இந்த இரண்டு மாகாணத்திலும் மூன்றாமிடத்தில் வந்துள்ளது.
தீவிர வலதுசாரிகளின் ஆதிக்கம் ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸ் கூட்டணி ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றே கூறப்படுகிறது. 2025 செப்டம்பர் மாதம் பெடரல் தேர்தல் முன்னெடுக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.