Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

அதிகரிக்கும் போர் பதற்றம் : ரஷ்யா மீது 158 ட்ரோன்களை ஏவிய உக்ரைன்

0 1

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையின் சமீபத்திய நிகழ்வாக, ரஷ்ய தலைநகர் மொஸ்கோ உள்பட 15 பிராந்தியங்களை குறிவைத்து நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மூலம் மிகப்பெரிய தாக்குதலை உக்ரைன் நடத்தி இருப்பதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

குறித்த  தாக்குதலின் போது கிட்டத்தட்ட 158 ட்ரோன்களை இடைமறித்து தாக்கி அழித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல்கள் நகரத்திற்கு அருகில் உள்ள நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மற்றும் நகர எல்லைக்குள் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு மையம் ஆகியவற்றை குறிவைத்து நடத்தப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் அதிகாரிகளின் வழங்கிய, 3 ட்ரோன்கள் Kashira நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததாக கூறப்பட்டுள்ளது.

இதன்போது யாரும் காயமடையவில்லை எதற்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் மின்சாரமானது எந்தவொரு தடையுமின்றி வாடிக்கையாளருக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பெரும்பாலான ட்ரோன்கள் (122 ட்ரோன்கள்) உக்ரைனின் எல்லை நகரங்களான Kursk, Bryansk, Voronezh, மற்றும் Belgoro ஆகிய பகுதிகளிலேயே சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.