D
புத்தளம்- கற்பிட்டி பகுதியில் பெட்ரோலுடன் மண்ணெண்ணெய் கலந்து விநியோகித்த எரிபொருள் நிரப்பு நிலையமொன்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சீல் வைப்பதற்கு இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, நேற்றைய தினம் இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் குழுவொன்று அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை மேற்பார்வை செய்ததுடன் அங்கிருந்து எரிபொருள் மாதிரிகளை பரிசோதனைக்காக பெற்றுக்கொண்டுள்ளது.
இதனையடுத்து எரிபொருள் நிரப்பு நிலையம் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.