Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

ஜனாதிபதித் தேர்தலில் முன்னிலையில் இருக்கும் வேட்பாளர் தொடர்பில் வெளியாகும் போலித் தகவல்கள்

0 1

ஜனாதிபதி தேர்தல் களத்தில் களமிறங்கியிருக்கும் வேட்பாளர்களுள்,  தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் இருப்பதாக போலியான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன என்று முன்னாள் ஆளுநர் எம்.அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக சம்மாந்துறை பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,  

கடன் செலுத்த முடியாத நாட்டை மீட்டெடுத்து இந்தளவு மக்களை கொண்டு கூட்டம் நடத்தும் நிலைக்கு கொண்டு வந்திருப்பதே பாரிய வெற்றியாகும். சஜித் அணியில் இறுதியாக 20 பேர் மட்டுமே எஞ்சப் போகிறார்கள். ஏனையோர் ஜனாதிபதியுடன் கைகோர்க்கவுள்ளனர்.

அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் இருப்பதாக போலி தரவுகளை வெளியிடுகின்றார். ஜே.வி.பியின் வரலாறுகள் மக்களுக்கு இன்றும் மறக்கவில்லை. அவ்வாறானவர்களிடம் நாட்டின் ஆட்சியை ஒப்படைக்க முடியுமா.?

மறுமுனையில் சஜித் பிரேமதாச சம்மாந்துறையில் 300 வீடுகளுக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால் இன்று வரையில் வீடுகள் கட்டவில்லை. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேசிய பட்டியலில் நாடாளுமன்றத்திற்கு வந்து ஜனாதிபதியாக இருக்கின்றார்.

அவற்றை வெற்றிகொள்ளும் சர்வதேச தொடர்புகளும், நாட்டின் செயற்பாடுகள் பற்றிய அறிவும் நாடாளுமன்றத்தில் வேறு எவருக்கும் இல்லை  என குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.