D
கொழும்பு (Colombo) பிரதான நீதவான் நீதிமன்ற பொறுப்பில் உள்ள போதைப்பொருள் மற்றும் தங்கம் உள்ளிட்ட ஆபரண பொருட்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேவினால் (Dilina Gamage) இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
24 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் காணாமல் போனதை அடுத்து இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி, நீதிமன்ற பொறுப்பிலுள்ள பொருட்களைப் பரிசோதிக்கும் வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக சகல வழக்கு சான்றுப் பொருட்கள் தொடர்பிலும் ஆவணம் ஒன்றை தமக்கு அனுப்புமாறு கொழும்பு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான உத்தரவு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற பதிவாளர் மற்றும் பொருள் பரிசோதகர் ஆகியோருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.