D
நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று (3) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாற்பதாவது அதிகாரமாக இருந்த பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் பன்னிரண்டாவது பிரிவின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய சபாநாயகர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துக்கணிப்புகளை மேற்கொள்பவர்களை உடன் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலதிக வகுப்புகள் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கருத்துக் கணிப்புகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இவர்களை இனங்கண்டு கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையினருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் (Election Commission) தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.