D
ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் ஜனவரி முதல் அரச ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 24 – 50 சதவீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ள விடயம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்ட குறித்த ஊடக அறிக்கை தேர்தல் தாக்கத்தை ஏற்படுத்தும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake) குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் சர்வதேச ஊடகம் கேள்வி எழுப்பிய போதே ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் தொடர்பில் ஊடக அறிக்கையை வெளியிடுவது தேர்தல் சட்டங்களை மீறுவதாக அமையுமா என்ற கேள்வி தற்போது பரவாலாக எழுந்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு: தேர்தல் சட்டங்களை மீறுவதாக குற்றச்சாட்டு | Increase Salary Allowance Of Government Employees
சம்பள உயர்வை பெறும் அரச ஊழியர்கள் அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க உதய ஆர்.செனவிரத்ன தலைமையில் ஆணைக்குழு ஒன்றை நியமித்திருந்தார்.
இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி, 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01ஆம் திகதி முதல் அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் குறைந்தபட்சம் 24 வீதம் மற்றும் குறைந்த தரங்களுக்கு 50 வீதத்துக்கும் அதிகமாக அதிகரிக்கப்படும்.
தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றும் தபால் மூல வாக்களிப்புக்கான திகதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் இவ்வாறானதொரு ஊடக அறிவிப்பை வெளியிடுவது நிச்சயமாக தேர்தலுக்கு இடையூறாக காணப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
இந்த அறிவிப்பு வெளியிட்டமை குறித்து முறைப்பாடு அறிக்கை கிடைத்தால் அதனை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து விசாரணைகளை மேற்கொள்வோம் என ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்
இந்நாட்டில் ஜனநாயகம் எங்கே இருக்கிறது என்பது தொடர்பில் அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.