D
கிரிபத்கொடை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு சட்டவிரோத விடுதிகளிலிருந்து 08 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரிபத்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிரிபத்கொடை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, ஓரு விடுதியிலிருந்து 05 பெண்களும் மற்றைய விடுதியிலிருந்து03 பெண்களும் செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை, பொலன்னறுவை, தெஹியத்தகண்டிய, பதவிய , மட்டக்குளி மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 24 முதல் 45 வயதுக்குட்பட்ட எட்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபத்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.