D
வடக்கு, கிழக்கை இணைக்கவும் தமிழீழக் கனவு நனவாகவும் ஒருபோதும் இடமளியேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அவிசாவளையில் (Avissawella) நேற்றையதினம் (11.09.2024) இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தின் போதே அவர் மேற்கண்டாவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“நாம் ஒற்றையாட்சியைப் பாதுகாப்போம். மாகாண சபைகளுக்குப் பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கமாட்டோம்.
அனைத்து மக்களினதும் மதம் மற்றும் கலாசார உரிமைகள் பாதுகாக்கப்படும்.
முதலீடு என்ற போர்வையில் தேசிய வளங்களை விற்பனை செய்யும் சூழ்ச்சி நடவடிக்கைக்கும் இடமளிக்கமாட்டோம்” எனத் தெரிவித்துள்ளார்.