Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

யாழில் உலங்குவானூர்தி மூலம் கொண்டுவரப்பட்ட வாக்கு பெட்டிகள்

0 1

யாழ் (Jaffna) மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு வாக்கு பெட்டிகள் உலங்குவானூர்தி மூலம் எடுத்துவரப்பட்டுள்ளன

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபயை தெரிவு செய்கின்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று(21) இடம்பெற்றிருந்தது.

யாழ்.மாவட்டத்தின் 10 தேர்தல் தொகுதிகளிலும் உள்ள 511 வாக்களிப்பு நிலையங்களில் இருந்தும் வாக்குபெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில் காவல்துறையினரின் பாதுகாப்புடன் இன்று பிற்பகல் யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

நெடுந்தீவிற்கான வாக்கு பெட்டிகள் விமான படையின் உதவியுடன் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்திற்கு எடுத்துவரப்பட்டு வாக்கு எண்ணும் நிலையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

நெடுந்தீவிலிருந்து உலங்குவானூர்தி மூலம் வருகை தந்த சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களையும், விமானிகளையும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் மற்றும் உதவித்தேர்தல்கள் ஆணையாளர் திரு.இ.கி. அமல்ராஜ் , மற்றும் வடமாகாண பிரதி காவல்துறை மா அதிபர் ஏ.ஜெ. ஹாலிங்க ஜெயசிங்க ஆகியோா் வரவேற்றார்கள்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.