D
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) வெற்றி பெற்றால் நாடாளுமன்றம் கலைக்கப்படாது என வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தீலீபன் (Kulasingam Thileepan) தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க வெற்றி பெறும் பட்சத்தில் ஒன்றரை வருடங்களுக்கு நாடாளுமன்றம் கலைக்கப்படாது என்பதில் நம்பிக்கை உள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இன்று (21) வவுனியா (Vavuniya) அண்ணாநகர் பரமேஸ்வரா வித்தியாலயத்தில் தனது வாக்கை பதிவு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், ”மக்கள் அதிக அளவில் வாக்கு அளிப்பதில் ஆர்வம் கொண்டு செயல்படுவதை காணக் கூடியதாக இருக்கின்றது.
அந்த வகையில் ரணில் விக்ரமசிங்க வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.“ என தெரிவித்தார்.