D
கேகாலை (kegalle) வரக்காபொல பௌத்த கல்லூரியில் இடம்பெற்ற வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச் சீட்டை இரண்டாக கிழித்த நபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இங்கு சந்தேக நபர் கிழிந்த வாக்குச் சீட்டின் ஒரு பகுதியை தனது காற்சட்டை பொக்கெட்டிலும் மீதியை வாக்குப்பெட்டியிலும் போட்டுள்ளார்.
இதேவேளை யாழ்ப்பாணம் (Jaffna) – நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியசாலையில் வாக்களிக்க சென்ற இளைஞர் ஒருவர் வாக்குச் சீட்டை கிழித்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த இளைஞர் வாக்குச் சீட்டை கிழித்ததை அடுத்து யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று இடம்பெற்றுவரும் நிலையில், வாக்கெடுப்பு உத்தியோகத்தர்களால் வழங்கப்பட்ட வாக்குச் சீட்டையே குறித்த இளைஞர் இரண்டாக கிழித்துள்ளார். தேர்தல் திணைக்கள உத்தியோகத்தர்களின் முறைப்பாட்டுக்கமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.