D
இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அநுரகுமார திசாநாயக்கவின் ஆதரவாளர்கள் பலர் காலிமுகத்திடல் பகுதியில் திரண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாடு அநுரவிற்கே என்ற வாசகம் அடங்கிய பதாதைகள் மற்றும் இலங்கையின் தேசியக் கொடியுடன் உற்சாகமான வரவேற்பை வழங்கியுள்ளனர்.
அத்துடன் புதிய ஜனாதிபதியான அநுரவிற்கு ஆதரவான கோசங்களையும் எழுப்பி தமது மகிழ்ச்சியை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த 21ஆம் திகதி நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகளின் படி இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று இரவு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.