D
எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்கு முன்னர் மக்கள் மீண்டும் ரணிலை (ranil wickremesinghe)கேட்கப்போகின்றார்கள் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன(rajitha senarathne) தெரிவித்துள்ளார்.
நேற்று (13) இடம்பெற்ற புதிய ஜனநாயக முன்னணி கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி போன்ற கட்சிகளுக்குள் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. “ஐக்கிய மக்கள் சக்தி கட்சித் தலைமை கடும் அதிருப்தியில் உள்ளது. திசைகாட்டியிலும் நெருக்கடிகள் உள்ளன.
சலிப்படைந்த மக்கள் மீண்டும் ரணிலைக் கேட்பார்கள்
எனவே வரும் ஏப்ரல் மாதத்திற்குள், இந்த நெருக்கடி முடிவுக்கு வரும். இந்த அரசாங்கத்தால் சலிப்படைந்த மக்கள் மீண்டும் ரணிலைக் கேட்பார்கள்” என்றார்.
ராஜித சேனாரத்ன கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகி ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஆதரிக்கும் வகையில் அவர் பக்கம் தாவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.