D
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தெரிவாகும் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அனைவரும் தமது சம்பளத்தை கட்சி நிதிக்கு வழங்கவுள்ளதாக கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி(sunil handunnetti) தெரிவித்துள்ளார்.
தமது கட்சி சலுகைகளுக்காக அரசியல் செய்யும் இயக்கம் அல்ல என்றும் அவர் கூறினார்.
கொள்கையில் மாற்றம் ஏற்படாது
ஆளுங்கட்சியில் இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியில் இருந்தாலும் சரி இந்த கொள்கையில் மாற்றம் ஏற்படாது என அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை தலவத்துகொடையில் நேற்றையதினம் (13) தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(anura kumara dissanayake) கலந்து கொண்ட உரையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.