Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிப்பது…விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்

0 0

14.11.2024 அன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்ற முடிவை எடுப்பதில் தமிழ் மக்கள் கரிசனை கொள்ள வேண்டும் என தமிழ் சிவில் சமூக அமையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில், கடந்த எண்பது வருடங்களாக சிறிலங்கா அரசினதும் தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களதும் மூலாதார இயக்கு கொள்கையாக இருப்பது சிங்கள பௌத்த மேலாண்மை மட்டுமே.

இதற்காகவே அரசும் ஆட்சியாளர்களும் தமிழ் இன அழிப்பை பிரதான வேலைத் திட்டமாகக் கொண்டுள்ளனர். அரசானது மிகவும் நுணுக்கமாகத் திட்டமிட்டு குடியேற்றங்கள் மற்றும் பல்வேறு வழிகளில் நில அபகரிப்பினைத் தொடர்கிறது.

தமிழ் மக்களின் மொழி, கல்வி, பண்பாடு, வரலாறு, பொருளாதாரம், இயற்கைச் சூழல், மற்றும் வளங்களை சிதைக்கிறது. தமிழர்களை கொல்லுதல், சித்திரவதை செய்தல், காணாமற் போகச் செய்தல், பயங்கரவாதத் தடைச் சட்டம் மூலம் தனி மனிதர்களினதும் குடும்பங்களினதும் வாழ்க்கையை சீரழித்தல் என தமிழ் மக்களின் இருப்பைச் சவாலுக்கு உட்படுத்துகிறது.

அதீத இராணுவப் பிரசன்னம், தமிழர்களையும் பிரதேசங்களையும், திட்டமிட்டு அபிவிருத்தி மற்றும், பொருளாதாரச் செயற்பாடுகளில் புறக்கணிப்பது, தமிழ் மக்களின் நலன்களுக்குப் பாதகமான அபிவிருத்திகளை (மன்னார் காற்றாலை, கடலட்டைப் பண்ணை போன்றன) மட்டும் தமிழ் நிலங்களில் பலவந்தமாக நிறைவேற்றுவது, திட்டமிட்ட போதைவஸ்துப் பரவலாக்கம் என தம்மாலியன்ற அனைத்து வழிகளிலும் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பை எப்போதும் தொடர்கின்றது.

ஆகவே தமிழ்த் தேசிய அரசியற் கொள்கையிலிருந்து ஒருபோதும் விலகாது தடுமாற்றமேதுமின்றி தொடர்ந்து உயரிய உறுதியுடன் நிற்கும் கட்சிகளுக்கு உங்கள் வாக்குகளை வழங்க வேண்டும் எனத் தமிழ் சிவில் சமூக அமையத்தினராகிய நாம் எமது மக்களை பணிவன்புரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.

Leave A Reply

Your email address will not be published.