D
காலி (Galle) – அம்பலாங்கொடை (Ambalangoda), ஊரவத்த பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்க இலக்கான ஆணும் பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் அம்பலாங்கொடை, குளிகொட பிரதேசத்தை சேர்ந்த 46 வயதான கணவன் மற்றும் மனைவி என தெரியவந்துள்ளது.
குறித்த இருவரும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டவர்கள் எனவும் தற்போதைய விசாரணையின்படி T 56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டிருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.