D
பொத்துஹெர முதல் ரம்புக்கனை வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மூன்றாம் கட்டப் பணிகளை விரைவில் முடிக்குமாறு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) பணிப்புரை விடுத்துள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலை தொடர்பாக நேற்று(09.11.2024) மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமான பணிகளை எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன், இந்த வீதிப் பிரிவின் தேவைகள் குறித்து அதிகாரிகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களையும் அவர் வழங்கியுள்ளார்.
210 பில்லியன் ரூபா செலவில் 32.4 கிலோ மீட்டர் நீளத்தைக் கொண்ட இந்த திட்டமானது கடந்த 2023 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.