D
நடைபெற்று முடிந்த இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலின் முழுமையான இறுதி முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி தேசிய மக்கள் சக்தி (NPP) 6,863,186 வாக்குகளைப் பெற்று 141 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 1,968,716 வாக்குகளைப் பெற்று 35 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 257,813 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
புதிய ஜனநாயக முன்னணி (NDF) 500,835 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) 350,429 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் 941,983 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன.