D
நிறைவடைந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணம் (Jaffna) மாவட்டத்திலிருந்து தெரிவாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அறிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி (National People’s Power) சார்பில் கருணானந்தன் இளங்குமரன், சண்முகநாதன் பவானந்தராஜா, ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன் ஆகிய மூவர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.
அதேவேளை இலங்கை தமிழரசு கட்சி சார்பில் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan) நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியுள்ளனர்.
அத்துடன் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவாகியுள்ளார்.
மேலும் சுயேட்சை குழு 17 சார்பில் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.