D
இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) திறைசேரி உண்டியல்கள் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி, 145,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் எதிர்வரும் 20ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளது.
அத்துடன், 91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 50,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை செய்யப்படவுள்ளது.
182 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 65,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளது.
364 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 30,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்களும் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கைக்கு 50 மில்லியன் டொலர் கடனுதவி வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) இணக்கம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் சூரியமின்கல திட்டத்தைச் செயற்படுத்துவதற்காக இதற்காக இலங்கையின் 10 நிதி நிறுவனங்களுடன் இணைந்து குறைந்த வட்டியில் கடன் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.