D
மாத்தளையில் (Matale) உள்ள தேசிய பாடசாலை ஒன்றில் தொழிநுட்ப கட்டிடத்தொகுதி தீப்பற்றி எரிந்து முற்றாக சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீவிபத்து சம்பவமானது நேற்றையதினம் (15.11.2024) இடம்பெற்றுள்ளது.
மாத்தளை – உக்குவெல அஜ்மீர் வித்தியாலயத்தின் ஆய்வகத்திலேயே இவ்வாறு தீ பரவியுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பாடசாலையில் தொழிநுட்ப கட்டிடத்தொகுதி மின்சார ஒழுக்கு காரணமாகவே தீப்பற்றியுள்ளதாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த தீ விபத்தினால் கட்டிடத்தொகுதி முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.