D
இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பின் ஆயுதப்படைகள் தெரிவித்துள்ளன.
டெல் அவிவ் நகர மக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இஸ்ரேல் ராணுவத்திற்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் நீடித்து வருகிறது.
இதனால், காசாவில் வசித்த பல்லாயிரகணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்து சிகிச்சையில் உள்ளனர்.
இதனால் அப்பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. இந்நிலையில், காசா முனையில் இருந்து டெல் அவிவ் நகர் மீது ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பினரின் ஆயுதப்பிரிவு தெரிவித்து உள்ளது.
அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
இச்சூழ்நிலையில், ராக்கெட் மூலம் தாக்குதல் நடத்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கும் வகையில் டெல் அவிவ் நகர மக்களுக்கு சைரன் ஒலியை எழுப்பி இஸ்ரேல் இராணுவம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
அதேநேரத்தில், எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் ஏதும் இல்லை என இஸ்ரேலிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
6 மாத காலமாக தொடர்ந்து நடைபெற்றுவரும் இந்த மோதலில் உயிரப்புக்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.