Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

விமல் – கம்மன்பில இணைந்து புதிய கூட்டணி

0 5

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச(Wimal Weerawansa) தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி (NFF)மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில(Udaya Gammanpila) தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய (PHU) மற்றும் பல சிவில் அமைப்புகள் இணைந்து ‘சர்வஜன பலய’ என்ற புதிய அரசியல் கூட்டணியை உறுவாகியுள்ளன.

கொழும்பில் இன்று(27.05.2024) காலை கூட்டணி அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் குறித்த தரப்பினர் கையெழுத்திட்டுள்ளனர்.

மவ்பிம ஜனதா கட்சி (MJB), ஜனநாயக இடதுசாரி முன்னணி, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சன்ன ஜயசுமண தலைமையிலான சுயேட்சை மன்றம் ஆகியவை இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.