D
தென்னிலங்கையில் வெளிநாட்டு பயணி ஒருவரின் பெருந்தொகை பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அளுத்கம பகுதியிலுள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த அமெரிக்க வர்த்தகர் ஒருவரிடமிருந்து 1.45 மில்லியன் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பணம் திருடப்பட்டுளு்ளது.
இது குறித்து தொடர்பில் அளுத்கம பொலிஸார் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். கடந்த 24ஆம் திகதி அமெரிக்க பிரஜையான ஆன்ட்ரூ கிறிஸ்டோபர் லூகாஸ் என்பவரின் பணமே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
சம்பவ தினத்தன்று அதிகாலை 4:20 மணியளவில் ஹோட்டல் அறைக்குள் திருடர்கள் புகுந்துள்ளதை அமெரிக்க அவதானித்துள்ளார்.
அங்கிருந்தவர்களிடம் உதவி கோரி கூச்சலிட்டதையடுத்து சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றதாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து அறையினை சோதனையிட்ட போது, 4,000 அமெரிக்க டொலர்கள், 210,000 இலங்கை ரூபாய்கள், அவரது கடவுச்சீட்டு மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவை காணாமல் போனமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.