D
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பி்ல் புலனாய்வுப் பிரிவினருக்கு தகவல் கிடைத்தும் அதனைத் தடுக்கத் தவறிய அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலாந்த ஜயவர்தனவுக்கு(nilantha jayawardena) எதிரான மனுவை பரிசீலிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஜூலை 25ஆம் திகதி பரிசீலிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று (28) சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே உத்தரவு பிறப்பிக்கப்பட்டள்ளது.
இதன்போது, இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனையை தாக்கல் செய்வதற்கான திகதியை வழங்குமாறு பிரதிவாதி நிலந்த ஜயவர்தன சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
அதன்படி, ஜூன் 25ம் திகதி அல்லது அதற்கு முன் ஆட்சேபனை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பின்னர் இந்த மனு மீதான விசாரணையை ஜூலை 25ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. சமூக மற்றும் சமாதான நிலையத்தின் பணிப்பாளர் தந்தை ஜூட் ரொஹான் சில்வாவினால் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.