D
உலக சந்தையில் நாளுக்கு நாள் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.
இலங்கையில் (srilanka) தங்கத்தின் விலையில் தொடர்ச்சியாக மாற்றங்கள் பதிவாகி வருகின்றன.
இந்த நிலையில், நாட்டில் இன்றைய தினம் (28.05.2024) 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 178,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,100 ரூபாவாகவும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 192,500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் 22 கரட் ஒரு கிராம் தங்கம் 22,300 ரூபாவாகவும், 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கம் 178,000 ரூபாவாகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.