Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

​இன்றைய ராசி பலன் 29.05.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

0 2

இன்றைய ராசிபலன் மே 29, 2024, குரோதி வருடம் வைகாசி 16, புதன் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். ரிஷபம், மிதுனம் ராசியில் உள்ள மிருகசீரிஷம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று செலவுகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது. இன்று உங்களின் வரவை விட செலவு அதிகரிப்பதால் கவலை அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமைய வாய்ப்புள்ளது. சட்டம் தந்த விஷயத்தில் சில தவறுகள் நடக்க வாய்ப்புள்ளது. அதனால் கவனமாக கையாள வேண்டும். இன்று உங்களின் பழைய நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் இருக்கக்கூடிய எந்த ஒரு முடிவு மற்றும் செயலிலும் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவை பெறுவீர்கள். உங்களின் புத்திசாலித்தனம் உங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும்.

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையவும். பெரிய இலக்குகளை அடையும் நோக்கத்தில், சிறிய விஷயங்கள் மீது கவனம் செலுத்த மாட்டார்கள். இன்று உங்களின் நிதி சார்ந்த விஷயத்தில் நல்ல வெற்றியும், மகிழ்ச்சியுடன் கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான விஷயத்தில் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க கூடியதாக இருக்கும். உங்களின் திறமைகளை நிரூபிக்கவும், உங்களின் மதிப்பு உதவும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு படிப்பு சார்ந்த விஷயத்தில் நலம் முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்றும் உங்களுக்கு சுமாரான பலன் தரக்கூடிய நாளாக இருக்கும். உங்களுக்கு பதவி உயர்வு கவனம் கிடைக்கும் மகிழ்ச்சி அடைகிறீர்கள். பணியிடத்தில் உங்களின் திறமைக்கேற்ற வேலை கிடைக்கும். சொத்து தொடர்பான விஷயத்தில் சாதக ஏற்படும். பணியிடத்தில் உங்களின் திறமைகளை நிரூபிக்க வாய்ப்பு உண்டு. அரசு துறையில் உள்ளவர்களுக்கு, பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டிய நாள். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் சிறப்பான நாளாக அமையும். உங்களின் விருப்பங்கள் நிறைவேறி மனமகிழ்ச்சி அடைவீர்கள். இன்று ஆன்மீகம் தொடர்பான விஷயத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வருமானம் தொடர்பான விஷயத்தில் நல்ல முன்னேற்றம் பெறுவீர்கள். உங்கள் வேலையில் அக்கறையுடன் செயல்படுவீர்கள்.. இன்று பல வழிகளில் இருந்து உங்களுக்கு வருமானம் கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்கள் கல்வி தொடர்பான விஷயத்தில் பிரச்சனைகள் தீரும்.

சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் சிறப்பான நாளாக இருக்கும். உங்களின் உடல் நலம் வேலைகளை முடிப்பதில் சாதகமாக இருக்கும். இன்று பிறருக்கு ஆலோசனை வழங்குவதை தவிர்க்கவும். உங்களின் பெற்றோர் சொல்வதைக் கேட்டேன் செயல்படுவது நல்லது. வியாபாரம் தொடர்பான விஷயங்களை கிடைக்கும். இன்று உங்களின் அன்றாட செயல்படுவதை சிறப்பாக சமாளித்து முன்னேறுவீர்கள்..

கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு முக்கியமான நாளாக இருக்கும். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய எந்த ஒரு வேலை, வியாபாரத்தில் நினைத்த வெற்றியைப் பெறலாம், இன்று உங்களின் தலைமைத்துவம் அதிகரிக்கும், வேலை செய்யக்கூடியவர்களும் பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்க்கலாம். குடும்ப வாழ்க்கையில் நீண்ட நாட்களாக இருந்து வந்த தடைகள் விலகி முன்னேற்றம் அடைவீர்கள். இன்று பெற்றோரை மதித்துச் செயல்படுவதும், அவர்களின் சேவையில் ஈடுபடுவதும் நன்மை தரும்.

துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று எந்த ஒரு வேலையும் பொறுப்புடன் செய்ய வேண்டிய நாள். பிள்ளைகளின் தொழில் தொடர்பான விஷயத்தில் அவசர முடிவு எதுவும் எடுக்க வேண்டாம். இது உங்களுக்கு சிக்கலை தர நேரிடும். புதிதாக அறிமுகமான நண்பர்களை அதிகம் நம்ப வேண்டாம். இன்று எதிரிகள் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்வார்கள். இன்று நீங்கள் கொடுத்துள்ள கடன் தொகையை திரும்ப பெற சாதகமான நாள். உங்களின் நிதின் நிலைமை மேம்படும்.

விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று படிப்பிலும், ஆன்மீகத்திலும் ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் செயல் திறன் சிறப்பாக இருக்கும். இன்று நெருங்கிய உறவினர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளது. குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான தருணங்களை அனுபவிப்பீர்கள். இன்று திருமண முயற்சிகள் நல்ல செய்தி கேட்பீர்கள். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இன்று உங்களின் பணத்தை கவனமாக கையாள்வது அவசியம். உங்கள் அதீத ஆர்வத்துடன் செய்யக்கூடிய இந்த ஒரு வேலையும் பிரச்சனையை தரக்கூடியதாக இருக்கும். எதிலும் நிதானம் அவசியம்.

தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் குடும்பம் விவகாரங்களில் கவனம் செலுத்துவது அவசியம். நீங்கள் எடுக்கக்கூடிய எந்த ஒரு முடிவும் மற்றும் செயலிலும் பெரியவர்களின் மூலம் ஆதரவை பெறலாம். குடும்பப் பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் பொறுமையாகவும், பேசியும் சேர்ப்பது நல்லது. காதல் வாழ்க்கையில் இணக்கமான சூழ்நிலை இருக்கும்.இன்று எந்த ஒரு கடினமான சூழ்நிலையும் சிறப்பாக சமாளிப்பீர்கள்.

மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரிகளுக்கு நல்ல நாளாக அமையும். உடன் பிறந்தவர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். அரசு வேலையில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இன்று உங்கள் வேலை மற்றும் குடும்ப பொறுப்புக்களைச் சமநிலையில் பராமரிப்பது அவசியம். இன்று நீங்கள் எதிர்பார்த்த திட்டங்கள் நிறைவேறாமல் போக வாய்ப்புள்ளது. வியாபாரிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற கடுமையாக போராட வேண்டியது இருக்கும்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் மரியாதையை அதிகரிக்கும். தாம்பத்திய வாழ்க்கை இன்பம் தரக்கூடியதாக இருக்கும். உங்களின் ஆடம்பரம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. உங்களின் வரவிருந்து செலவு செய்யவும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கருத்துக்களை புரிந்து கொண்டு செயல்படவும். உங்களின் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்ற பலனை அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் மூலம் நல்ல செய்திகளை பெறுவீர்கள்.

மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று நம்பிக்கையை நிறைந்த நாளாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் இனிமையான பேச்சால் மற்றவர்களை எளிதாக தீர்க்க முடியும். இன்று நீங்கள் திட்டமிட்டு முக்கிய பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க முடியும். அபூர்வமான பணிகளில் ஈடுபடுவீர்கள். இன்று உங்கள் வருமான உயர்வுக்கான சாதகமான சூழ்நிலை ஏற்படும். நீங்கள் எதிர்பார்க்கக் கூடிய உதவி உங்கள் குடும்பத்தினரிடமிருந்து சிறப்பாக கிடைக்கும். வியாபாரத்தில் புதிய திட்டங்களுடன் செயல்படுவீர்கள்.

Leave A Reply

Your email address will not be published.