Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

சூடுபிடிக்கும் பிரித்தானிய தேர்தல் களம்: கலைக்கப்பட்ட நாடாளுமன்றம்

0 4

எதிர்வரும் ஜூலை 4ஆம் திகதி பிரித்தானிய பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானிய பொதுத் தேர்தல் எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி நடத்தப்படும் என அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் அண்மையில் அறிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து உரிய காலத்திற்கு முன்னதாகவே தேர்தலை நடத்தும் பிரித்தானிய பிரதமரின் தீர்மானத்திற்கு கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்நதனர்.

இந்த நிலையில் பிரித்தானிய நாடாளுமன்றத்தின் செயற்பாடுகள் கடந்த 24ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்திருந்தன.

பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி தோல்வியடையும் என்று கூறப்படும் நிலையில் இன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து 5 வாரங்களின் பின்னர் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

14 ஆண்டுகால பழமைவாத ஆட்சியின் பின்னர், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்புகள் உள்ள நிலையில், தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருப்பதோடு அந்நாட்டில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

எதிர்த்தரப்பான தொழிலாளர் கட்சி இம்முறை ஆட்சியைக் கைப்பற்றக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கணிக்கின்றனர். நாடாளுமன்றத்தில் 650 இடங்களுக்கான போட்டி நிலவுகிறது.

அதை முன்னிட்டு 5 வாரப் பிரசாரம் அதிகாரபூர்வமாகப் பிரித்தானியாவில், தொடங்கியுள்ளது.

129 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தலில் மீண்டும் களமிறங்கப் போவதில்லை என்று அறிவித்தனர்.

விளம்பரம் அவர்களில் 77 பேர் கன்சர்வேட்டிவ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜூலையில் திடீரெனத் தேர்தல் அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாகக் பல உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவில், தேர்தல் இவ்வாண்டின் பிற்பாதியில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிரதமர் ரிஷி சுனாக் ஜூலை 4ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.