D
இன்றைய ராசிபலன் மே 30, 2024, குரோதி வருடம் வைகாசி 17, வியாழக் கிழமை, சந்திரன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். மிதுனம் ராசியில் உள்ள திருவாதிரை சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று அதிக செலவு ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். உங்களின் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். நீங்கள் விரும்பவிட்டாலும் இன்று சில செலவுகள் மன வருத்தத்தை தரப்படும்.வியாபார திட்டங்கள் ஏற்றம் தரக்கூடியதாக இருக்கும்.உங்கள் வீட்டிற்கு விருந்தினர் வருகையால் அதிகரிக்கும். தாயாரின் உடல்நிலை சற்று மோசம் அடையும். வாழ்க்கைத் துணையின் மூலம் நிதி லாபத்தை அடைவீர்கள்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களின் செல்வாக்கு, புகழ் உயரும். உங்களின் சாதனைகள் மூலம் மகிழ்ச்சியடைவீர்கள். உங்களின் பழைய தவறுகளை மீண்டும் செய்யாதீர்கள். நீங்கள் வாங்கி இருக்கக் கூடிய கடனை திரும்ப செலுத்த சாதகமான சூழல் இருக்கும். இன்று நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவும். ஒன்றும் மேற்பட்ட ஆதாரங்களில் இருந்து பணபலனை பெறுவீர்கள்.
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் நல்ல பலன் கிடைக்கக்கூடிய நாள். நீண்ட நாட்களாக உங்கள் தொழிலில் முன்னேற்றுவதற்கு யோசித்துக் கொண்டிருந்தவர்களுக்குச் சாதகமான பலன் கிடைக்கும். உங்களிடம் மறைந்திருக்கக்கூடிய திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்குப் பெரிய லாபத்தை ஏற்ற வாய்ப்பு உள்ளது. இன்று உங்களின் பணியிடத்தில் பிறரிடம் பெரும் தன்மையுடன் செயல்படுவது அவசியம். பிறரை அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்க கூடிய நாள். உடன் பிறந்தவர்களை நம்பி எந்த ஒரு பணம் சம்பந்தமான திட்டங்களிலும் ஈடுபட வேண்டாம். பணியிடத்தில் எந்த ஒரு வேலையிலும் அவசரப்படுவதைத் தவிர்க்கவும். இன்று உங்களின் பதற்றம் பிரச்சனை தரக்கூடியதாக அமையும். ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் நிறைய பணம் செலவழிக்க வாய்ப்புள்ளது. திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியே அதிகரிக்கும். தொழில் சம்பந்தமான விஷயத்தில் நிதிநிலை அதிகரிக்கும்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று சிறப்பான நாளாக அமையும். இன்று ஆன்மீக காரியங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உற்றார் உறவினரின் நல்ல அறிவுரை உங்களை முன்னேற்றம். இன்று தெரியாத நபர்களையோ, புதிதாக அறிமுகமான நபர்களை அதிகமாக நம்ப வேண்டாம். என்ற ஒரு செயலையும் அவசரப்பட்டுச் செய்யாமல் கவனமாக சிந்தித்து செயல்படுவோம். இன்று புதியதாக ஒப்பந்தங்கள் கிடைக்க . வாய்ப்புள்ளது. திருமண விஷயத்தில் இருந்து தடைகள் நீங்கி நல்ல வரன் அமையும்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று சொத்துக்கள் சேரக்கூடிய நாளாக இருக்கும். புதிதாக சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்படும். இன்று உங்களின் தலைமைத்துவம் சிறப்பாக இருக்கும். துணையின் உடல்நலம் குறித்து கவலைப்படுவீர்கள். என்ற எந்த ஒரு கடினமான சூழ்நிலையை கூட பொறுமையாக கையாள்வீர்கள். இன்று குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களின் மூலம் ஆதரவையும், அன்பையும் பெறுவீர்கள். சுயதொழில் செய்யக் கூடியவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று கடினமான உழைப்பிற்கான நற்பலனை பெறுவீர்கள். இன்று அவசரமாக எந்த ஒரு வேலையையும் செய்வதை தவிர்க்க வேண்டியது அவசியம். இன்று எந்த ஒரு பெரிய ரிஸ்கையும் எடுக்க வேண்டாம். இன்று உங்களின் எந்த ஒரு வேலையை முடிப்பதிலும் ஒழுக்கத்துடனும், புத்துணர்ச்சியுடன் செயல்பட வேண்டும். இன்று உங்களின் சில புதிய தொடர்புகள் நல்ல பலனை தரக்கூடும். பெற்றோருடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சாதகமான நாளாக இருக்கும். சமூகத்தில் உங்களின் செயலுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். உங்களின் திடீர் பண வரவு குடும்பத்தில் மகிழ்ச்சியாக இரட்டிப்பாகும். மாணவர்கள் படிப்பு விஷயத்தில் கவனமாக செயல்படவும். இன்று உங்களின் முக்கியமான வேலைகளை சரியான நேரத்தில் முடிக்க முடியும். உறவுகளை அனுசரித்துச் செல்லவும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று அவசரமாக எந்த ஒரு முடிவையும் எடுப்பதை தவிர்க்கவும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சிக்கான செய்திகளை கேட்பீர்கள். வேலையில் பதவி உயர்வு கிடைத்து மகிழ்ச்சியடைவீர்கள். மனிதர்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். இன்று உங்களின் பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சில சலுகைகளை பெறுவீர்கள். இன்று உங்களுக்கான வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். சிலருடன் சேர்ந்து செய்யக்கூடிய எந்த ஒரு வேலையிலும் நல்ல பலனை பெறுவீர்கள். அதில் வெற்றி அடைவீர்கள். குடும்பத்தில் சில சுபா நிகழ்ச்சிகள் நடப்பதற்கான மங்கள சூழல் நிலவும். புதிய திட்டத்தில் வெற்றிகள் உண்டாகும். நீங்கள் செய்து முடிக்க நினைத்த முக்கிய பணிகளை முடிப்பதில் அவசரம் காட்டுவீர்கள். அது உங்களின் எதிரிகள் தொந்தரவு செய்ய வாய்ப்புள்ளது.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று தொழில், வியாபாரம் செய்யக்கூடிய அவர்களுக்கு மிகவும் சிறப்பான நாளாக இருக்கும். இன்று உங்கள் வேலையில் முழு வேகமும், விவேகமும் காட்டுவீர்கள். உங்களின் செல்வ நிலை உயரும். உற்றார், உறவினர்களின் முழு ஆதரவை பெறுவீர்கள். குடும்பத்தில் சில மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணங்களைப் பெறுவீர்கள். இன்று நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும். மாணவர்கள் கல்வியில் ஏற்படும் பிரச்சனைகளை சிறப்பாக சம்பாதிப்பீர்கள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று கலைத்துறையுடன் தொடர்புடையவர்கள் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவீர்கள். தனிப்பட்ட வாழ்க்கையில் உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். பணியிடத்தில் உங்களின் மதிப்பு மரியாதை அதிகரித்து மகிழ்ச்சி அடைவீர்கள். இன்று உங்களின் உலக இன்பம் அதிகரிக்கும். இன்று சிலருக்கு உதவ வாய்ப்பு கிடைக்கும். சுற்றுலா அல்லது பயணம் செல்ல வாய்ப்புள்ளது.