Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

டிரம்ப் தொடர்பில் நீதிமன்றின் அதிரடி அறிவிப்பு: அமெரிக்க வரலாற்றில் முதல் தீர்ப்பு

0 2

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் (Donald Trump) வழக்கு விசாரணையில் அவர் குற்றவாளி என்று மன்ஹாட்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

2016ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தம்மைப் பற்றிய தவறான செய்திகளை மறைப்பதற்கு நடிகை ஒருவருக்கு 1.3 இலட்சம் டொலா் (சுமாா் ரூ.109 கோடி) வழங்கியதாக டிரம்ப் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இது தொடர்பில் டிரம்ப் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி என நீதிபதி அறிவித்த நிலையில் ஜூலை 11ஆம் திகதி டிரம்ப்பிற்கான தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவில் ஒரு முன்னாள் அதிபர் குற்ற வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இந்த தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் மேன்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில் ரீதியான ஆதாயத்திற்காக டிரம்ப் போலியான ஆதாரங்களை உருவாக்கியுள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் டிரம்ப்பிற்கு அதிகபட்சமாக 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் டிரம்புக்கு சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பில்லை என்பது நிபுணர்கள் தரப்பின் நம்பிக்கையாக உள்ளது.

டிரம்ப் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் அதிபராக போட்டியிட எந்த சிக்கலும் இல்லை என்றே கூறப்படுகிரது.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக போட்டியிடும் முனைப்புக்களில் டிரம்ப் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Leave A Reply

Your email address will not be published.