D
அமெரிக்கா(us) வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி ரஷ்யா(russia)வில் இலக்குகளைத் தாக்குவதற்கு உக்ரைனுக்கு(Ukraine) அதிபர் ஜோ பைடன்(joe biden) அனுமதி அளித்துள்ளார், ஆனால் கார்கிவ் பிராந்தியத்திற்கு அருகில் மட்டுமே இந்த தாக்குதலை முன்னெடுக்க வேண்டுமெனவும், அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
“கார்கிவில் பதிலடி தாக்குதல்களுக்காக உக்ரைன், அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்துமாறு அதிபர் சமீபத்தில் தனது குழுவிற்கு உத்தரவிட்டார், எனவே உக்ரைன், ரஷ்யப் படைகளைத் தாக்கும் அல்லது அவர்களைத் தாக்கத் தயாராகிறது” என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் பிபிசி செய்தியிடம் தெரிவித்தார்.
ரஷ்யாவிற்குள் நீண்ட தூர தாக்குதல்களை அனுமதிக்கக் கூடாது என்ற வோஷிங்டனின் கொள்கை மாறவில்லை என்றாலும், அறிக்கைகளின்படி, மொஸ்கோ சமீபத்திய நடவடிக்கையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது.
அதிரப்போகும் உக்ரைன் போர்க்களம் : அனுமதி அளித்தது அமெரிக்கா | Ukraine Allowed To Hit Some Targets In Russia
ரஷ்யாவின் எல்லையில் அமைந்துள்ள கார்கிவ் பகுதியில் நடந்த திடீர் தாக்குதலைத் தொடர்ந்து ரஷ்யப் படைகள் சமீபத்திய வாரங்களில் பல வெற்றிகளைப் பெற்றுள்ளன.
பிரான்ஸ்(france), ஜேர்மனி(germany) மற்றும் இங்கிலாந்து உட்பட பல ஐரோப்பிய நாடுகள், மேற்கத்திய நாடுகளால் வழங்கப்படும் ஆயுதங்களை உக்ரைன் எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதற்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு முன்னர் சமிக்ஞை செய்தன.
ஆனால், உக்ரைனின் பெரும்பகுதி ஆயுதங்களை வழங்கும் வோஷிங்டன், தாக்குதல் விரிவாக்கம் பற்றிய அச்சத்தின் காரணமாக இந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதை எதிர்த்தது.