Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

ஈரான் அதிபர் பதவி : தொடங்கியது மனு தாக்கல்

0 3

ஈரான்(iran) அதிபர் இப்ராகிம் ரைசி(ibrahim raisi) கடந்த 19-ம் திகதி உலங்குவானூர்தி விபத்தில் உயிரிழந்த நிலையில் ஈரான் அதிபர் தேர்தலில் போட்டியிடுவோர் தொடர்பான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.

இதன்படி விண்ணப்பங்களை தாக்கல் செய்ய 5 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன் ஜூன் 11-ம் திகதி வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்படும்.

ஈரான் உச்ச தலைவரால் நியமிக்கப்பட்ட 12 சட்ட வல்லுநர்களை கொண்ட கார்டியன் கவுன்சில் விண்ணப்பங்களை சரிபார்த்து வேட்பாளர்களை இறுதி செய்து அறிவிக்கும்.

அதன்பின்னர் ஜூன் 28-ம் திகதி வாக்குப்பதிவு நடைபெறும்.

எம்.பி.க்கள் முஸ்தபா கவாகெபியன் மற்றும் முகம்மத்ரசா சபாகியன் ஆகியோர் உள்துறை அமைச்சகத்திடம் தங்கள் மனுக்களை தாக்கல் செய்திருப்பதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பழமைவாத தலைவரான சயீத் ஜலிலி, முன்னாள் அதிபர் அக்பர் ஹாஷமி ரப்சஞ்சனியின் மகன் மோசென் ஹாஷமி ரப்சஞ்சனி ஆகியோரும் மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

இதேபோல், தற்காலிக அதிபர் முகமது மாக்பர், முன்னாள் சபாநாயகர் அலி லரிஜானி ஆகியோரும் போட்டியிடலாம் என தெரிகிறது.

ஈரான் தேர்தல் சட்டத்தின்படி, வேட்பாளர்கள் 40 முதல் 75 வயதிற்குள் இருக்க வேண்டும், குறைந்தபட்சம் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.