Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

​இன்றைய ராசி பலன் 01.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

0 1

இன்றைய ராசிபலன் ஜூன் 01, 2024, குரோதி வருடம் வைகாசி 19, சனிக் கிழமை, சந்திரன் மீனம் ராசியில் சஞ்சரிக்கிறார். கடகம் ராசியில் உள்ள பூசம் சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய ராசி பலனை தெரிந்து கொள்வோம்.

மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று செல்வ வளர்ச்சி தரக்கூடிய நாள். உங்களின் செயல்களுக்கு குடும்பத்தில் முழு ஆதரவு கிடைக்கும். இன்று எந்த ஒரு வேலையும் செய்வதில் அவசரம் காட்ட வேண்டாம். குடும்பத்திலிருந்து வருகை மகிழ்ச்சியை அதிகரிக்கும். குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்றுவது மும்முரமாகச் செயல்படுவீர்கள். குடும்பத்தில் இருக்கக்கூடிய மனஸ்தாபங்கள் தீரும். வேலையில் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.]

ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று ஆக்கப்பூர்வமான வேலைகளை செய்து மகிழ்வீர்கள். இன்று உங்களுக்கு மரியாதை, நற்பெயரும் அதிகரிக்கும். வேலையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் தீரும். அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் வெற்றி அடையும். உங்களின் வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். பழைய தவறுகளில் இருந்து பாடத்தை கற்றுக் கொள்வீர்கள்.

மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும்.. வாழ்க்கை துணையுடன் உறவு வலுப்படும். அவர்களுடன் சேர்ந்து உங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்குவீர்கள். முதலீடு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்கவும். நெருங்கியவர்களின் நம்பிக்கை பெறுவதில் வெற்றி பெறுவீர்கள். இன்று யாரையும் அதிகமாக நம்ப வேண்டாம். இன்று உங்களின் திட்டமிட்ட வேலைகள் மிகச் சிறப்பாக நிறைவேறும்.

கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் படிப்பில் மிக சிறப்பாக செயல்படுவார்கள். நிதிநிலை ரீதியான விஷயத்தில் கவனமாக இருக்கவும். இன்று உங்களின் திட்டமிட்ட பெரிய இலக்கை அடைய முடியும். இன்று அதிக முயற்சி செலுத்துவது நல்லது. இன்று பிறர் அருமையான சர்ச் செல்வது நல்லது. அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் எண்ணம் நிறைவேறும். மாணவர்கள் உயர்கல்விக்கான பாதைகள் அமையும். வெளிநாட்டிலிருந்து சில சலுகைகள் பெற முடியும். வியாபாரம் தொடர்பான விஷயத்தில் பலவீனமான நாளாக இருக்கும்.

சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீகம் சார்ந்த விஷயத்தில் ஆர்வத்துடன் கலந்து கொள்கிறீர்கள். சமூக நிகழ்வுகள் உங்களுக்கு புகழ் ஏற்படும்.இன்று ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருந்து உங்களுக்கு வருமான வாய்ப்புகள் கிடைக்கும். பணியிடத்தில் உங்களின் திறமைக்கேற்ற பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. காதல் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும் இன்று உங்களின் வேலைகளை பிசியாக செய்து முடிப்பீர்கள். உங்களின் பொறுப்புக்களை நிறைவேற்றுவீர்கள்.

கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று இன்று நீங்கள் தொடங்கக்கூடிய எந்த ஒரு புதிய வேலையிலும் நல்ல பலன் கிடைக்கும். வணிகம் சார்ந்த விஷயத்தில் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். இன்று நிலுவையில் உள்ள உங்களின் வேலைகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீங்கள் யாரிடம் ஆவது கடன் வாங்கி இருந்தால் அதை தீர்ப்பு செலுத்தக்கூடிய சாதனை சூழல் நிலவும். குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக சுற்றுலா செல்ல வாய்ப்புள்ளது.

துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று எந்த வேலையும் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பாக நீங்கள் எதிர்பார்த்த கடன் உதவி உங்களுக்கு கிடைக்கும். அதே சமயம் இன்று கடன் பெறுவதை தவிர்ப்பதும் நல்லது. பணிபுரிபவர்களுக்கு மேல் அதிகாரிகள் ஒதுக்கிய வேலைகளை முழு கவனத்துடன் செய்து முடிப்பது நல்லது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்து மகிழ்ச்சியடைவீர்கள். என்ற புதிய வாகனம் வாங்கும் நல்வாய்ப்பு உண்டு.

விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று புதிய சொத்துக்கள் வாங்கும் கனவு நிறைவு. குடும்ப உறவில் நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் குழந்தைகளிடமிருந்து சில ஏமாற்றமான செய்திகளை கேட்க நேரிடும். உங்களின் பெற்றோரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வாய்ப்புள்ளது. பணியிடத்தில் முக்கிய விஷயங்களை செய்து முடிப்பதில் மன அழுத்தம் ஏற்படும்.

தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று கடினமாக உழைக்க வேண்டிய நாள். எந்த ஒரு ஆபத்தான வேலையிலும் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் உங்களின் சிறப்பான செயல்பாடுகளுக்கு ஏற்ப பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் எதிரிகள், மோசடி நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்கும். உங்கள் வேலையை கண்ணும் கருத்துமாக செய்து முடிக்கவும். குடும்பம் மற்றும் வேலை தொடர்பான விஷயத்தில் பொறுமையாக செயல்படவும். உடல் நல பிரச்சினைகளை புறக்கணிக்காதீர்கள்.

மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் முக்கியமான நாளாக அமையும்.. நண்பர்கள் மற்றும் சகோதரர்களிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கும். குடும்ப தகராறுகள் தீரும். பண பரிவர்த்தனைகளில் மிகவும் கவனமாக செயல்படவும். சட்டம் தொடர்பான முக்கிய வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாள். நண்பர்களுடன் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் பங்கேற்பியர்கள். மாணவர்கள் தேர்வில் சிறப்பான வெற்றியை பெறுவார்கள்.

கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு சாதகமான நாள். உலகம் இன்பங்களை அனுபவிக்கும் வழிகளைப் பெறுவீர்கள். உங்களின் ஆற்றலை சரியாக பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். இன்று யாரிடமும் ஆணவத்துடன் பேசுவதை தவிர்க்கவும். வேலை தேடக்கூடிய நபர்களுக்கு நண்பர்களின் உதவியும், சலுகையும் பெறலாம். தனிப்பட்ட விஷயத்தில் முழு கவனத்துடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களின் உணர்வை புரிந்து கொண்டு செயல்படவும்.

மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று பொறுப்புகளை சிறப்பாக நிறைவேற்றுவீர்கள். அரசியல் துறையில் பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். இன்று உங்களின் கவலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. உங்களின் முக்கிய செயல்கள் முடிப்பதில் நண்பர்கள், உறவினர்களின் முழு ஆதரவு கிடைக்கும். புத்திசாலித்தனமாக எந்த ஒரு செயலையும் செய்து முடிக்கவும். பணியிடத்தில் முழு கவனம் செலுத்தவும். சமயப் பணிகளில் அதிக ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். அரசாங்க விஷயங்களை கவனமாக கையாள வேண்டும்.

Leave A Reply

Your email address will not be published.