D
நடிகர் தனுஷ் தமிழ், ஹிந்தி மொழிகளைத் தாண்டி ஹாலிவுட் படத்திலும் நடித்திருக்கிறார். அவருக்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டமும் இருக்கிறது.
நடிப்பது மட்டுமின்றி தற்போது படங்கள் இயக்குவதிலும் முழு கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ்.
நடிகர் ஸ்ரீகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், அவரிடம் “நீங்கள் யாரையாவது பார்த்து பொறாமை பட்டிருக்கிறீர்களா?” என கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பதில் அளித்த ஸ்ரீகாந்த், “நடிகர் தனுஷை பார்த்து நான் பொறாமை பட்டிருக்கிறேன். நாங்கள் ஒரு முறை ஒன்றாக பணியாற்றியபோது, டான்ஸ் மாஸ்டர் இல்லாத நிலையில் தனுஷ் தான் லேடி ஆர்ட்டிஸ்ட்டுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்தார். ஒரே மாதிரி கொஞ்சம் கூட மாறாமல் ஐந்து முறை நடனமாடி காட்டினார்.”
“அவருக்கு இருக்கும் திறமையை அப்போதுதான் நான் நேரில் பார்த்தேன். அவர் பெண்ணாக இருந்திருந்தால் நான் காதலித்திருப்பேன்” என ஸ்ரீகாந்த் பேட்டி அளித்திருக்கிறார்.