Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

மின்சார சட்டமூலம் அரசியலமைப்பிற்கு முரணானது : உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு

0 1

இலங்கை மின்சார சட்டமூலத்தின் பல சரத்துக்கள், அரசியலமைப்பிற்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரசாங்கத்தினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த மின்சார சட்டமூலத்திற்கு எதிரான மனு விசாரணையிற்கான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சபாநாயகரால் இன்று (04) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இதன்போதே சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன (Mahinda Yapa Abeywardena) குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாடாளுமன்றத்தின் சிறப்பு பெரும்பான்மை மற்றும் வாக்கெடுப்பு மூலம் மட்டுமே சட்டமூலம் நிறைவேற்றப்பட​ வேண்டுமென உயர்நீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் , உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி குறித்த சரத்துக்கள் திருத்தப்பட்டால் சட்டமூலம் எளிய பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுமென அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.