D
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல்வேறு நோய்கள் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாகச் சுகாதார அமைச்சு (Ministry of Health) தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக வயிற்றுப்போக்கு, தடுமல், வைரஸ் காய்ச்சல்கள் உள்ளிட்ட நோய்கள் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாகச் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா (Deepal Perera) தெரிவித்துள்ளார்.
இந்த நோய்களானது அசுத்தமான நீர் மற்றும் உணவுகளைப் பயன்படுத்துவதன் மூலம் இலகுவாகப் பரவக்கூடும் என குறிப்பிட்டுள்ளார்.
காய்ச்சல், வாந்திபேதி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி மற்றும் மலத்துடன் இரத்தம் கசிதல் உள்ளிட்டவை இந்நோய்களுக்கான அறிகுறிகளாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் காய்ச்சல் விரைவாகப் பரவினால் அது வைரஸ் காய்ச்சலாகவும் இருக்கலாம் என கூறினார்.
இதேவேளை குளிர் காலம் காரணமாகக் குழந்தைகள் மத்தியில் காய்ச்சல் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.