D
மக்கள் செல்வன் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் தற்போது மகாராஜா திரைப்படம் உருவாகி திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தை நித்திலன் என்பவர் இயக்கத்தியுள்ளார்.
இவர் இயக்கத்தில் ஏற்கனவே வெளிவந்த குறுக்கு பொம்மை எனும் திரைப்படம் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது. மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து மம்தா மோகன்தாஸ், அனுராக் கைஷப், அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் வெளிவந்த எதார்த்தமான திரைப்படம் 96. இப்படத்தை பிரேம் என்பவர் இயக்கியிருந்தார். 96 படத்தின் கிளைமாக்ஸில் ஹீரோ – ஹீரோயினுக்கு இடையே பிரிவு ஏற்படும்பொழுது அந்த காட்சியில் இருவருக்கும் லிப் லாக் இருந்ததாம்.
ஆனால் அது அப்படி வேண்டாம் என கூறினாராம் விஜய் சேதுபதி. ராம் – ஜானுவை எந்த ஒரு காட்சியிலும் தொட வேண்டாம் என்பது போலவே இருக்கட்டும் என அதன்பின் முடிவு செய்தார்களாம். இதனை விஜய் சேதுபதி பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.