Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

யோகி பாபு ஒரு நாளைக்கு இவ்வளவு சம்பளம் வாங்குகிறாரா! எவ்வளவு தெரியுமா

0 3


தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களில் தற்போது டாப்பில் இருப்பவர் யோகி பாபு. இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் அரண்மனை 4 வெளிவந்தது. இப்படம் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து யோகி பாபு கைவசம் கங்குவா, GOAT, அந்தகன், மெடிக்கல் மிராக்கள் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. ஒரு நகைச்சுவை நடிகராகவும் மறுபக்கம் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.

அப்படி அவர் நடித்து வெளிவந்த மண்டேலா திரைப்படம் அனைவராலும் ரசிக்கப்பட்டது. தொடர்ந்து மக்களை திரை மூலம் மகிழ வைத்து வரும் நடிகர் யோகி பாபுவின் சம்பளம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, யோகி பாபு ஒரு நாளைக்கு ரூ. 12 லட்சம் வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் பிஸ்மி வலைப்பேச்சு Youtube பக்கத்தில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.