Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

தீவிர சிகிச்சை பிரிவில் நாடாளுமன்ற உறுப்பினர்: மகிந்தானந்தவிற்கு எதிராக முறைப்பாடு

0 3

நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே (Mahindananda Aluthgamage) தனது தந்தையை தாக்கியதாக நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்சவின் (Gunathilaka Rajapaksha ) மகன் கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்சவின் எழுத்துப் பூர்வ முறைப்பாடும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், தனது தந்தையை தாக்கியதில் அவரது கால் எலும்பு முறிந்துள்ளதாகவும் அதற்கு அறுவை சிகிச்சையில் இரும்புத் தகடுகள் பொருத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தனது தந்தை தற்போது கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் மேலதிக மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய சட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தநிஹால் தள்துவ குறிப்பிடுகின்றார்.

மேலும், முறைப்பாட்டாளரான குணதிலக்க ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக காவல்துறையினர் சென்ற போதிலும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதால் வாக்குமூலம் பெற முடியாமல் போனதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.