D
சினிமாவில் நாம் கொண்டாடும் நட்சத்திர ஜோடிகளில் சரத்குமார்-ராதிகாவும் உள்ளார்கள்
இருவருமே சினிமாவில் சாதித்துள்ளார்கள், தற்போது அரசியலிலும் கால் பதித்துள்ளனர். அதாவது சரத்குமார் அவர்கள் ஏற்கெனவே அகில இந்திய சமத்துவ கட்சி தொடங்கி நடத்தி வந்த நிலையில் இப்போது ராதிகாவும் அவருடன் அரசியலில் களமிறங்கியுள்ளார்.
இந்த முறை பாஜகவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைக்க ராதிகா சரத்குமார் முதன்முறையாக தேர்தலில் போட்டிபோட்டுள்ளார்.
விருதுநகரில் ராதிகாவிற்கு போட்டியான தேமுதிக சார்பில் விஜயகாந்த் மகன் விஜன பிரபாகரன் போட்டியிட்டுள்ளார்.
ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் அனைவரும் முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று நடிகர் சரத்குமார் தனது மனைவி ராதிகாவுடன் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக விருதுநகர் ஸ்ரீபராசந்தி மாரியம்மன் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்துள்ளார்.
அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.