Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

கனேடியர்கள் தொடர்பில் ஆய்வில் புதிய தகவல்

0 4

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் கனேடியர்கள் (Canadians) வங்கி கிளைகளுக்கு செல்ல அதிகம் விரும்புவதில்லை என தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வானது, கே.பி.எம்.ஜீ என்ற கணக்காய்வு நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் படி, ஆய்வில் பங்குபற்றிய 48 வீதமானவர்கள் வருடமொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு தடவைகள் மாத்திரமே வங்கிக் கிளைகளுக்கு செல்வதாக கூறப்படுகிறது.

இதேவேளை, இணைய வழியில் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் வங்கி கிளைகள் இயங்க வேண்டுமென 86 வீதமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், கிராமிய பகுதிகளில் உள்ள கிளைகளை தொடந்தும் நடத்துவதற்கு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், பணத்தை வைப்பிலிடுதல் மற்றும் பெற்றுக்கொள்ளல் போன்ற தேவைகளுக்காகவே வங்கி கிளைகளை மக்கள் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.