D
பா.ஜ.கவின் ஊடகப்பரப்புரையை உடைத்தெறிந்த தி.மு.கவின் இந்த வெற்றியானது, வரலாற்றுச் சிறப்புமிக்கது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (M.K.Stalin) தெரிவித்துள்ளார்.
தனது கட்சியின் வெற்றியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மக்களவை தேர்தலின் (Indian Lok Sabha Election) வாக்கெண்ணிக்கைக்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் தமிழ்நாட்டில் தி.மு.க கட்சி அமோக வெற்றியடைந்துள்ளது.
இதன்படி, தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள 1 தொகுதி என 40 நாடாளுமன்ற தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில், தி.மு.க கூட்டணியுடன் போட்டியிட்ட அ.தி.மு.க, பா.ஜ.க, நா.த.க (NTK) மற்றும் ஏனைய கட்சிகள் எந்த ஆசனங்களும் இன்றி தோல்வியை தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.