D
காலி முகத்திடல் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தின் போது கோட்டாபயவை (Gotabaya Rajapaksa) படுகொலை செய்யத் திட்டமிடப்பட்டிருந்ததாக போராட்ட செயற்பாட்டாளர்களில் ஒருவரான ஸெஹான் மாலக்க தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, கோட்டாபயவை படுகொலை செய்யத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் கோட்டாபயவை சோபித தேரர் (Omalpe Sobitha Thera) காப்பாற்றியதாக அவர் தெரிவித்துள்ளார்.
கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார (Sugeeshwara Bandara) அழுது புலம்பி தலைவரை காப்பாற்றுமாறு சோபித தேரரிடம் கோரியதாகத் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறுவதற்கு தேவையான ஆவணங்களை பெற்றுக்கொள்ள சோபித தேரர் நடவடிக்கை எடுத்திருந்ததாகவும் மற்றும் நாட்டில் இடம்பெறவிருந்த பாரிய இரத்த வெள்ளத்தை தாம் உள்ளிட்ட சிலர் தடுத்ததாகவும் செஹான் மாலக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.