D
இவர் இயக்கத்தில் இதற்குமுன் ஜெய் பீம் திரைப்படம் வெளிவந்து வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
பகத் பாசில், அமிதாப் பச்சன், ராணா, துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மக்கள் மத்தியில் அதீத எதிர்பார்ப்புடன் இருக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் சாட்டிலைட், ஓடிடி மற்றும் ஆடியோ உரிமைகள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, வேட்டையன் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதே போல், சாட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனமும் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் கைப்பற்றியுள்ளது என தெரியவந்துள்ளது.